G2 ஃபைனாசியல் சர்வீசஸ் வெரிஃபிகேஷன் (Privacy Policy Tamil)

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

மே 31, 2022

தனியுரிமைக் கொள்கை

G2 வெப் சர்வீசஸ் (“G2” அல்லது “நாங்கள்”), தனியுரிமை பற்றிய உங்கள் கவலைகளை மதிக்கிறது. G2 ஃபைனான்சியல் சர்வீசஸின் சரிபார்ப்புச் சேவை தொடர்பாக நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கு இந்தக் கொள்கை பொருந்தும். நாங்கள் பெறும் தனிப்பட்ட தரவின் வகைகள், தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துகிறோம், யாருடன் பகிர்கிறோம் என்பதை இந்தக் கொள்கை விவரிக்கிறது. உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் மற்றும் எங்கள் தனியுரிமை நடைமுறைகள் குறித்து நீங்கள் எங்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதையும் நாங்கள் விவரிக்கிறோம்.

விண்ணப்ப/சரிபார்ப்பு செயல்முறை மூலம் நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு தொடர்பான தரவுக் கட்டுப்பட்டாளர் G2 ஆகும்.  எங்கள் தொடர்பு விவரங்களையும், எங்கள் பிரதிநிதியின் தொடர்பு விவரங்களையும் இந்தக் கொள்கையின் முடிவில் உள்ள எங்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்ற பிரிவில் காணலாம்.

1.   உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் எவ்வாறு பெறுகிறோம்

எங்கள் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் நீங்கள் புகுபதிகை செய்யும் போது அல்லது அவற்றை அணுகும் போது நீங்கள் எங்களுக்கு வழங்கத் தேர்வு செய்யும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கிறோம். சேகரிக்கப்படுகின்ற தனிப்பட்ட தரவில் உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவையும், உரிம எண் அல்லது டொமைன் பெயர் போன்ற உங்கள் வணிகத்தைப் பற்றிய தகவலும் மட்டுமல்லாது இன்னும் பலவும் உள்ளடங்கும்.

2.   நாங்கள் பெறும் தகவல்

நீங்கள் எங்களுக்கு நேரடியாக வழங்கும் தனிப்பட்ட தரவானது, நீங்கள் வழங்கும் சூழலில் இருந்து தெளிவாகத் தெரியும். உதாரணத்திற்கு: நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமான வினவலை அனுப்பும்போதோ, எங்கள் சேவைகளுக்குப் புகுபதிகை செய்யும்போது அல்லது அதற்கான அணுகலைப் பெறும்போது ஒரு படிவத்தை நிரப்பும்போதோ, பொதுவாக உங்கள் பெயர், வணிகத் தொடர்பு விவரங்கள் மற்றும் படிவத்தில் கோரப்படுகிற வேறு ஏதேனும் தகவலையும் வழங்குவீர்கள். ஒவ்வொரு படிவமும், தேவைப்படுகிற மற்றும் சேகரிக்கப்படுகிற தகவல்களில் மாறுபடும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், என்ன தகவல் தேவை என்பதற்கான ஒரு தெரிவிப்பு உள்ளது. தேவையில்லாத கூடுதல் தகவல்களை வழங்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

3.   நாங்கள் பெறும் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்

எங்கள் தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்குமான அணுகலை உங்களுக்கு வழங்குவதற்கும், உங்கள் வினவலுக்குப் பதிலளிப்பதற்கும் (எடுத்துக்காட்டாக, உங்கள் கோரிக்கை குறித்து உங்களைத் தொடர்பு கொள்ள, கேள்வி கேட்க, தயாரிப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகளை வழங்க, கருத்தாய்வுகளை நடத்த, எங்கள் சேவைகளை வழங்குவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான பிற காரணங்களுக்காக உங்களைத் தொடர்பு கொள்ள) நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம்.  உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உங்கள் அக்கறைகள், உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றால் மீறப்படாத வகையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிற ஆர்வமுள்ள நபர்களுக்கும் சேவைகளை வழங்குவதில் எங்களுக்கு சட்டரீதியான வணிக அக்கறை இருப்பதால், இந்த நோக்கங்களுக்காக தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.

மேலே கலந்துரையாடப்பட்ட பயன்பாடுகளுக்குக் கூடுதலாக, விண்ணப்ப/சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது பின்வருவதற்காகவும் நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடும்:

  • எங்கள் வணிகத்தை நடத்துதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்;
  • புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல்;
  • சந்தை ஆராய்ச்சியை மேற்கொள்தல்;
  • எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல்;
  • எங்கள் விளம்பரப்படுத்துதலின் மற்றும் சந்தைப்படுத்துதலின் செயல்திறனை தீர்மானித்தல்;
  • எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் இணையதளங்களை பகுப்பாய்வு செய்தல்;

உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உங்கள் அக்கறைகள், உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றால் மீறப்படாத வகையில் எங்கள் வணிகத்தை நடத்துவதிலும் மேம்படுத்துவதிலும் எங்களுக்கு சட்டரீதியான அக்கறை இருப்பதால், மேலே விவரிக்கப்பட்டுள்ள இந்த நோக்கங்களுக்காக தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.

மோசடி, உரிமைகோரல்கள் மற்றும் பிற பொறுப்புகளுக்கு எதிராகப் பாதுகாப்பது மற்றும் அவற்றைத் தடுப்பது, பொருந்தும் சட்டத் தேவைகள், தொழிற்துறைத் தரநிலைகள், எங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றிற்கு இணங்குவது அல்லது அவற்றை அமல்படுத்துவது போன்றவற்றிற்கும் நாங்கள் தகவலைப் பயன்படுத்தக்கூடும்.   எங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்க, பிரயோகிக்க அல்லது காப்பாற்றத் தேவைப்படும்போது, அல்லது எங்களுக்குப் பொருந்தும் சட்டத்தின்படி அவ்வாறு செய்ய வேண்டியிருக்கும் போது, இந்த நோக்கங்களுக்காக தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.

4.   நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்

இங்கே விவரிக்கப்பட்டுள்ளதைத் தவிர, நீங்கள் எங்களுக்கு வழங்கும் அல்லது விண்ணப்ப/சரிபார்ப்புச் செயல்முறை மூலம் நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவை நாங்கள் விற்கவோ அல்லது மற்றபடி வெளிப்படுத்தவோ மாட்டோம். நீங்கள் எங்களுக்கு வழங்கும் அல்லது விண்ணப்ப/சரிபார்ப்புச் செயல்முறை மூலம் நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவை பின்வருபவர்களுடன் நாங்கள் பகிரக்கூடும்:

  • TransUnion குழுவில் உள்ள பிற நிறுவனங்கள்;
  • எங்கள் சார்பாக சேவைகளை மேற்கொள்ளும் சேவை வழங்குநர்கள்; மற்றும்
  • எங்கள் வணிகக் கூட்டாளர்கள் மற்றும் துணை நிறுவனங்கள்.

TransUnion குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்கள் அமைந்துள்ள நாடுகள் உள்ளிட்ட விவரங்களை www.TransUnion.com இணையதளத்தில் https://www.verisk.com/about/verisk-businesses/ காணலாம்.

பணமளிப்புச் சேவை வழங்குநர்கள், பகுப்பாய்வு வழங்குநர்கள், ஹோஸ்டிங் வழங்குநர்கள், ஆலோசகர்கள் போன்ற எங்கள் சார்பாக சேவைகளை மேற்கொள்ளும் சேவை வழங்குநர்களுடன் நாங்கள் தனிப்பட்ட தரவைப் பகிரக்கூடும்.  அனைத்து சேவை வழங்குநர்களும், எங்கள் சார்பாக சேவைகளை மேற்கொள்வதற்கு அல்லது பொருந்தும் சட்டத் தேவைகளுக்கு இணங்குவதற்குத் தேவையான தனிப்பட்ட தரவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது வெளியிட வேண்டும் என்கின்ற சட்டப்பூர்வமாய் கட்டுப்படுத்துகின்ற ஒப்பந்தங்களை ஏற்றுள்ளனர்.

G2 ஃபைனான்சியல் சர்வீசஸ் வெரிஃபிகேஷன் சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்க நாங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ள எங்கள் வணிகக் கூட்டாளர்களுடன் நாங்கள் தனிப்பட்ட தரவைப் பகிரக்கூடும். எங்கள் உறவாளர்கள் அனைவரும், எங்கள் சார்பாக சேவைகளை மேற்கொள்வதற்கு அல்லது பொருந்தும் சட்டத் தேவைகளுக்கு இணங்குவதற்குத் தேவையான தனிப்பட்ட தரவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது வெளியிட வேண்டும் என்கின்ற சட்டப்பூர்வமாய் கட்டுப்படுத்துகின்ற ஒப்பந்தங்களை ஏற்றுள்ளனர்

கூடுதலாக, உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை பின்வரும் நிலையில் நாங்கள் வெளியிடக்கூடும்: (a) சட்டத்தின் அல்லது சட்டச் செயல்முறையின்படி நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால் அல்லது அனுமதிக்கப்பட்டால், உதாரணமாக நீதிமன்ற உத்தரவு அல்லது சட்ட அமலாக்க நிறுவனத்தின் கோரிக்கை காரணமாக, (b) உடல் ரீதியான தீங்கு அல்லது நிதி இழப்பைத் தடுக்க வெளிப்படுத்தல் அவசியமானது அல்லது பொருத்தமானது என நாங்கள் நம்பும்போது, (c) சந்தேகத்திற்குரிய அல்லது உண்மையான மோசடி அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கையின் விசாரணை தொடர்பாக, மற்றும் (d) நாங்கள் எங்கள் வணிகத்தை அல்லது சொத்துக்களை முழுமையாகவோ பகுதியளவோ விற்றால் அல்லது இடமாற்றினால் (மறுசீரமைப்பு, கலைப்பு அல்லது தீர்த்துக்கட்டுதல் ஆகிய நிகழ்வில் என்பது உட்பட).

5.   தரவு இடமாற்றங்கள்

உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவை, தனிப்பட்ட தரவு முதலில் சேகரிக்கப்பட்ட நாட்டைத் தவிர வேறு நாடுகளில் உள்ள பெறுநர்களுக்கு நாங்கள் இடமாற்றக்கூடும். நீங்கள் முதலில் தனிப்பட்ட தரவை வழங்கிய நாட்டில் உள்ள அதே தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் அந்த நாடுகளில் இல்லாமல் போகலாம். உங்கள் தனிப்பட்ட தரவை பிற நாடுகளில் (யுனைடெட் ஸ்டேட்ஸ் போன்றவை) உள்ள பெறுநர்களுக்கு நாங்கள் இடமாற்றும்போது, இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி தனிப்பட்ட தரவைப் பாதுகாப்போம்.

நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (“EEA”), யுனைடெட் கிங்டம் (“UK”) அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்தால், EEA, UK, சுவிட்சர்லாந்து ஆகியவற்றிற்கு வெளியிலுள்ள நாடுகளில் இருக்கின்ற பெறுநர்களுக்கு தனிப்பட்ட தரவை இடமாற்றுவதற்கு நாங்கள் பொருந்தும் சட்டத் தேவைகளுக்கு இணங்குவோம்.  இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும், பின்வருமாறு இருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை இடமாற்றுவோம்:

கீழே உள்ள எங்களை எவ்வாறு தொடர்புகொள்வது என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் தனிப்பட்ட தரவின் இடமாற்றங்கள் தொடர்பாக நாங்கள் அமைத்திருக்கும் பாதுகாப்புகள் பற்றிய ஒரு நகலை நீங்கள் கோரலாம்.

6.   நாங்கள் எவ்வளவு காலம் தகவல்களை வைத்திருக்கிறோம்

தனிப்பட்ட தரவை நாங்கள் வைத்திருக்கும் கால அளவு, அதை எந்த நோக்கத்திற்காகச் சேகரித்தோம் என்பதைப் பொறுத்தது.  எல்லா சந்தர்ப்பங்களிலும், நாங்கள் சேகரித்ததன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யத் தேவையான வரை அதை வைத்திருக்கிறோம்.  தனிப்பட்ட தரவை நாங்கள் சட்டப்பூர்வமாக வைத்திருக்க வேண்டியிருந்தால் தவிர அல்லது எங்கள் சட்டப்பூர்வக் கடமைகளுக்கு (உதாரணமாக, வரி மற்றும் கணக்கியல் நோக்கங்களுக்காக) இணங்குவதற்கு அதைத் தக்கவைக்க வேண்டியுள்ளது என்றாலொழிய, தனிப்பட்ட தரவை பிறகு நாங்கள் அழித்துவிடுவோம்.

பொருந்தக்கூடிய சட்டத் தேவைகளுக்கு உட்பட்டு, விண்ணப்ப/சரிபார்ப்புச் செயல்முறையின் மூலம் நீங்கள் எங்களுக்கு வழங்கிய தனிப்பட்ட தரவை நாங்கள் வழக்கமாக வைத்திருப்போம்: உங்கள் விண்ணப்பத்தைச் செயலாக்குவதற்குத் தேவையான வரை மற்றும் நீங்கள் கூடுதல் கோரிக்கைகளை எங்களுக்கு அனுப்புகின்ற நிகழ்வில் இன்னும் சிறிது காலத்திற்கு இந்தத் தனிப்பட்ட தரவை நாங்கள் வைத்திருக்கிறோம்.

7.   உங்கள் உரிமைகள் மற்றும் விருப்பத்தெரிவுகள்

நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி (“EEA”), UK அல்லது சுவிட்சர்லாந்தில் இருந்தால், உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவு தொடர்பாக பின்வரும் உரிமைகள் உங்களுக்கு இருக்கக்கூடும்:

  • உங்களுடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோமா என்பதை உறுதிப்படுத்தக் கோருவதற்கு மற்றும், அத்தகைய நிகழ்வில், அந்த தனிப்பட்ட தரவின் நகலைக் கோருவதற்கு;
  • துல்லியமற்ற, முழுமையடையாத அல்லது காலாவதியான உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சரிசெய்யுமாறு அல்லது புதுப்பிக்குமாறு கோருவதற்கு.
  • உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்பது, நீங்கள் உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறுவது போன்ற சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தரவை அழிக்குமாறு எங்களிடம் கோருவதற்கு;
  • நீங்கள் சமர்ப்பித்துள்ள மற்றொரு கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கும்போது (எடுத்துக்காட்டாக, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் புதுப்பிப்பது தொடர்பான கோரிக்கை) போன்ற சில சூழ்நிலைகளில் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கு;
  • உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கும், உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கும் நீங்கள் எங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளீர்கள் எனுமிடத்தில்; மற்றும்
  • சில சூழ்நிலைகளில், கட்டமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படுத்தப்படுகிற மற்றும் இயந்திரத்தால் படிக்க முடிகின்ற வடிவத்தில் உங்கள் தனிப்பட்ட தரவின் நகலை உங்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு.

மேலே விவரிக்கப்பட்ட உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, மின்னஞ்சல் மூலமாகவோ, கீழே உள்ள “எங்களைத் தொடர்புகொள்வது எப்படி” என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடியோ நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

உங்கள் நாட்டில் உள்ள தரவுப் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையத்திடம் புகார் அளிக்கவும் உங்களுக்கு உரிமை உள்ளது.  உங்கள் நாட்டில் உள்ள தரவுப் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையத்தின் தொடர்புத் தகவலை நீங்கள் இங்கு காணலாம்.

8.   எங்கள் கொள்கைக்கான புதுப்பிப்புகள்

எங்களின் தனிப்பட்ட தரவு நடைமுறைகள் அல்லது தொடர்புடைய சட்டங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், நாங்கள் இந்தக் கொள்கையை அவ்வப்போது மற்றும் உங்களுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் புதுப்பிக்கலாம். நாங்கள் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை இடுகையிடுவோம் மற்றும் அது எப்போது மிகச்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பதை கொள்கையின் மேற்பகுதியில் குறிப்பிடுவோம்.

9.   எங்களை எப்படி தொடர்பு கொள்வது

இந்தக் கொள்கையைப் பற்றி உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால் அல்லது தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் அல்லது வெளியிடுகிறோம் என்பது தொடர்பான ஏதேனும் பிரச்சினை இருந்தால் அல்லது உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவலையோ உங்கள் முன்னுரிமைகளையோ நாங்கள் புதுப்பிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளலாம்:

மின்னஞ்சல் மூலம்: clientservices@g2llc.com

இதற்கு எழுதியனுப்புவதன் மூலம்:

G2 வெப் சர்வீசஸ்
பெறுநர்: Data Protection Officer
1750 112th Ave NE, Bellevue, WA 98004, USA

[நான் G2 ஃபைனான்சியல் சர்வீசஸ் வெரிஃபிகேஷன் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் புரிந்துகொண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன், மேலும் அதில் விவரிக்கப்பட்டுள்ளபடி தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு இதன் மூலம் ஒப்புக்கொள்கிறேன்.]